பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: 2% சேவை கட்டணம் வாபஸ் பெற்றது பேடிஎம்!

 

மார்ச்-8 தேதி முதல் கிரெடிட் கார்டு மூலமாகப் பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றும் போது 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என பேடிஎம் நிறுவனம் அறிவித்திருந்தது.

பேடிஎம் அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பேடிஎம்-ன் இந்த திடீர் கொள்ளை குறிதது,   சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் கடும் விமர்சனத்தை எழுப்பியது.

அதைத்தொடர்ந்து ஏராளமானோர் பேடிஎம் சேவையிலிருந்து தங்களை விடுவிக்க தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பேடிஎம் நிறுவனம் தனது 2 சதவிகித சேவை கட்டணத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துஉள்ளது.

இதுகுறித்து தனது பிளாக்கில் அறிவித்துள்ளது.

அதில்,  பேடிஎம் வாலெட்டில் கிரெடிட் கார்டு மூலமாகப் பணத்தை ஏற்றும் போது பெறப்படுவ தாகக் கூறிய அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம் என்று கூறியுள்ளது.

பேடிஎம் பேடிஎம் இணையதளம் அல்லது ஆப் மூலம் ஏதேனும் பொருட்களை வாங்கும்போது அல்லது ரீசார்ஜ் செய்யும் போது அல்லது பிற பரிவர்த்தனைகள் ஏதேனும் செய்யும் போது பலவகையான பணமளிப்பு முறையில் பணம் செலுத்த முடியும்.

அண்மையில் இந்த பரிவர்த்தனைக்கு 2% சேவை கட்டணம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக தினசரி பேடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்யும்  லட்சக் கணக்கான மக்கள் பேடிஎம் சேவையில் இருந்து வெளியேற தொடங்கினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பேடிஎம் நிறுவனம் கட்டண விதிப்பை திரும்பப் பெற்றுள்ளது. அதையடுத்து,  இநத் சிக்கலைத் தவிர்க்க புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும், கிரெடிட் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க புதிய அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளது.

English Summary
Public opposition: PayTM withdrawal 2% service charge