8வழிச் சாலை: எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

சேலம்:

சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான நிலங்களை தரமுடியது என்று சேலம் பகுதி மக்கள் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர்.

புறவழிச்சாலை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சொந்தக்காரங்களான அப்பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியல் அலுவலகம் சென்றும், இந்த புறவழிச்சாலை  திட்டத்தை கைவிட வேண்டும் ம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம்  மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த புறவழிச்சாலை திட்டத்தினால்   25 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.என்றும், வீடுகள் இடிக்கப்படும்போது, வீடுகளின்றி தவிக்கும் சூழல் உருவாகும். சிறு குறு விவசாயிகளான எங்களுக்கு வாழ்வாதாரமாக   இந்த விவசாய நிலங்கள் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. இது தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை. எனவே பசுமை வழிச்சாலைக்கு எங்கள் நிலத்தை தர இயலாது என்று கூறி உள்ளனர்.

மேலும்,. சேலத்தில் இருந்து சென்னை செல்ல தற்போது 4 பிரதான சாலைகள் உள்ளன.  இந்த பிரதான சாலைகளை விரிவு படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.

எனவே, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்தியஅரசு அறிவித்துள்ள பசுமை வழிச்சாலை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏராளமான விளைநிலங்கள், தோப்புகள் அழிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த  குப்பனூர், சின்னகௌண்டாபுரம், ராமலிங்கபுரம், வரகம்பாடி  பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  பசுமை விழ சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 8வழிச் சாலை: எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு, Public petition in Salem Collector's office against Chennai-Salem Green Corridor Express Highway project
-=-