சென்னை:
பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அந்தந்த கட்சி செலவிலேயேஅகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
publi paint
சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு சுவர்கள், மலைகள், இயற்கை வளங்கள் போன்றவற்றில் அரசியல் கட்சியினர், ஆன்மீகவாதிகள், கல்லூரி முதலாளிகள், வியாபார பெருமக்கள் தங்களது கட்சி விளம்பரங்களை வரைந்து  விளம்பரப்படுத்துவது வாடிக்கை.
பொது இடங்களில் வரையப்படும் இதுபோன்ற விளம்பரங்காளல் இயற்கை அழகு சிதைக்கப்படுவதாகவும், இவற்றை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர்  யானை   ராஜேந்திரன் ஆகியோர் சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இயற்கை வளங்கள் மீது விளம்பரங்கள் செய்ததாக,   இதுவரை 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொது இடங்களில் வரையப்பட்ட அனைத்து விளம்பரங்களையும் அழிப்பதற்கும் அதற்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தே வசூலிக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சியினருக்கு ஒரு மாத காலம் அவகாசம் தருவதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்று செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.