பொதுத் துறை வங்கிகள் தனியார் மயம் இல்லை…பியூஷ் கோயல்

லண்டன்:

பொதுத் துறை வங்கிகிளை தனியார் மயமாக்கும் திட்டம்இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

                                                                        பியூஸ் கோயல்

லண்டனில் இந்தியா-ஐக்கிய பேரரசு வார விழாவில் வீடியா கான்பரசிங் மூலம் பியூஷ் கோயல் பேசுகையில், ‘‘அடுத்த 30 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்த 4 ஆண்டுகளை செலவிட்டுள்ளோம். நிறைய கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. தேர்தலை நெருங்கி வந்தாலும் மக்களுக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும் நடவடிக்கையை மட்டும் எடுக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தலை மனதில் வைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நல்ல அரசுக்கு இந்திய மக்கள் வாக்களிப்பார்கள். அதனால் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கப்போவதில்லை. முத்ரா திட்டம் மூலம் 12 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் சொந்த காலில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வங்கிகள் வலுப்படுத்தப்படும். பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை’’என்றார்.