சென்னை: கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால்,  முடக்க்ததில் மேலும் தளர்வுகள், கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, இ-பாஸ், பொது போக்கு வரத்து அனுமதிப்பது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன்  இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலை தடுக்க 7வது கட்ட ஊரடங்க  ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை உள்ளது. இந்த நிலையில்,  லாக்டவுனை மேலும் நீடிக்கலாமா? இ பாஸ் முறையை ரத்து செய்யலாமா? என் னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது பற்றிமருத்துவத்துறை நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல் காணொளி காட்சி மூலம்  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தளர்வுகள் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.