எஸ்.பி.பி. நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி….!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 25-ம்தேதி காலமானார். அவரது உடல்,தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்.பி.பி.யின் நினைவிடத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அக்டோபர் 1, 2 ஆகிய நாட்கள் அனுமதியளிக்கப்பட்டது .

போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணி முதல், மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .