இரு அதிமுக அணியினரும் இணைவதையே மக்கள் விரும்புகின்றனர் : அமைச்சர் செல்லூர் ராஜு
சென்னை
இரு அதிமுக அணியினரும் இணவதையே மக்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் முதலிடத்திலும் அதிமுகவின் மதுசூதனன் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு பேட்டியில், “அதிமுகவினர் இரு பிரிவுகளாக பிரிந்து அதிமுகவின் இரு அணிகளுக்கும் வாக்களித்துள்ளனர். இரட்டை இலைக்கு என்றும் எதிர்க்கட்சி உதய சூரியன் தான். குக்கர் அல்ல. தற்போது திமுகவினரும் அதன் ஆதரவு கட்சிகளும் மட்டும் திமுகவுக்கு வாக்களித்துள்ளது. அதிமுகவினர் வாக்கு இரண்டாக பிரிந்துள்ளது. மொத்தத்தில் இரு அணிகளையும் இணைவதையே மக்கள் விரும்புகின்றனர்” எனக் கூறி உள்ளார்.