டில்லி,

பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், கீழ்கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை  வலைதளத்தில் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்.கே.ஜெயின் என்பவர் மத்திய தகவல் ஆணையத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,   ஐகோர்ட்டு மற்றும் கீழ்க்கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4-வது பிரிவு வகை செய்கிறது.  ஆனால் சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கும் பல உத்தரவுகள் ஐகோர்ட்டின் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்படுவது இல்லை. எனவே, கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடுமாறு ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

இது மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாதுர், பொதுமக்களின் நலன் கருதி கீழ்க்கோர்ட்டுகள் மற்றும் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

அப்படி அந்த உத்தரவுகளை வெளியிடுவது பொதுமக்கள், வழக்கு தொடர்வோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயன்அளிப்பதாகவும், உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.