அரசிதழில் வெளியானது: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம்!

--

சென்னை,

மிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் அரசிதழில்  வெளியிடப்பட்டது இதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. இனிமேல் வருடம்தோறும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற தடை ஏதும் இல்லை.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளை ஞர்கள் பங்குபெற்றனர். தமிழகம் முழுவதும் அமைதிவழியில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் போராட்டம் நடத்தின்ர்.

ஜல்லிக்கட்டுக்கான தமிழர்களின் அமைதி போராட்டம் உலகத்தின் பார்வையை தமிழகம் மீது திருப்பியது. உலகமே வியந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர், தமிழக அரசு மூலம் அவசர சட்டம் இயற்றுவது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால்,  மத்தியஅரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற முடியாது என்றும், தமிழக அரசே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் முன்னாள் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி கட்ஜு போன்றவர்கள் கூறினர்.

இதன் காரணமாக டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, சட்ட முன்வடிவு தயார் செய்து,  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தமிழகத்தில் தடையின்றி நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

கடந்த 20ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசின் உள்துறையும் அனுமதி கொடுத்தது. மறுநாளே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தமிழக அரசின் சட்டத்திற்கு கையெழுத்திட்டார்.

அதைத்தொடர்ந்து  தமிழக அரசிதழில்  வெளியிடப்பட்டது.

தமிழக இளைஞர்களின் மகத்தான அகிம்சை வழி போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி.

You may have missed