சென்னை:

தாய்லாந்தை தாக்கிய ‘பபுக்’ புயல் காரணமாக ரூ.20ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டில் சுமார் 30ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பலத்த புயல் தாக்கியது. தாய்லாந்தின் தெற்கு கடலோரப் பகுதியில் பபுக் புயல் நேற்று கரையை கடந்தது. அப்போது  மணிக்கு 75 கிலோ மீட்டர் முதல் 95 கிலோ மீட்டர் வரை வீசிய புயலால் பாக் பாகாங் மாவட்டத்தில் நூற்றுக்கணக் கான மின்கம்பங்கள் சேதமடைந்து முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும்,  நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தாய்லாந்தின்  கோஹ் சமூய் (Koh Samui), கோஹ பான்கன் (Koh Phangan), கோஹ தாவ் (Koh Tao) பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள், அப்பகுதியை விட்டு வெளியேறாத முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்களது நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.