Random image

புதுச்சேரி: பாஜ நியமன எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய முயற்சி – பரபரப்பு

புதுச்சேரி :

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்குள் செல்ல ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்திய நிலையில், அவர்களை அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியது பாஜக நியமன எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த வாரம் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  அங்கு  கவர்னர் கிரண்பேடியால் அரசு அனுமதியின் இரவேடு இரவாக நியமனம் செய்யப்பட்ட பாஜ நியமன எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், பாஜக எம்எல்ஏக்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், மேல்முறையீடு வழக்கு  உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில், பாஜக நியமன எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்று பணியாற்றுங்கள் என்று கவர்னர் கிரண்பேடி கூறியிருந்தார்.

ஆனால், புதுச்சேரி சட்டசபைக்குள் நியமன எம்எல்ஏ.,க்கள் 3 பேரையும் அனுமதிக்கக் கூடாது என சபாநாயகர் வைத்தியலிங்கம்  மீண்டும் கூறி உள்ளார்.  இதனால் சட்டசபை வளாகத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தடையை மீறி சட்டசபையைக்குள் செல்வோம் என பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்கள் அறிவித்திருந்தனர். இன்று அவர்கள்  சட்டசபைக்கு வந்த போது அவர்களை 3 பேரையும் சட்டசபை வளாகத்திற்குள் நுழைய விடாமல் வாயில் கதவுகளை மூடி அவை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்கும்படி அவை காவலர்களுடன், நியமன எம்எல்ஏ.,க்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.