தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…

புதுச்சேரி:

மிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். அதன்படி,  10-ம் வகுப்பு  மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என அறிவித்தார்.

இதனைதொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்து உள்ளார்.