சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் – வீடியோ

புதுச்சேரி:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூய்மையே இந்தியா சேவை திட்டத்திற்காக முதல்வர் தானே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மோடி பிரதமராக பதவி ஏற்றதும், சுவாச் பாரத் என்ற பெயரில் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த நிக்ழச்சி வாயிலாக நாடு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கழிவறைகள் இல்லா வீடுகளுக்கு இலவச கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர், நடிகைகள் தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு துப்புறவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்கள் நெல்லித்தோப்பு பகுதியில்  ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் குப்பைகள் காரணமாக தேங்கியிருந்த சாக்கடைக்குள் இறங்கி, சாக்கடையினை சுத்தம் செய்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

புதுச்சேரி முதல்வர் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ