புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: மே 2ம் தேதி முடிவுகள் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

டெல்லியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களோடு புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 6ம் தேதி புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி முடிகிறது. வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22ம் ஆகும் என்று தெரிவித்தார்.