புதுச்சேரி,

புதுச்சேரியில் பாரதியஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது மரபை மீறிய செயல் என்றும், புதுவை வரலாற்றில் இது முதன்முறை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மக்களிடம் செல்வாக்கில்லாத பாரதியஜனதா கட்சியினரை,  புறவாசல் வழியாக எம்எல்ஏக்களாக நியமனம் செய்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பாரதியஜனதா கட்சியினரா சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகிய 3 பேரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆளும் காங்கிரசாரின் அனுமியில்லாமலேயே நியமனம் செய்யப்பட்டிருப்பது காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

புதுவையில் சட்டசபையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து கொள்ள அதிகாரம் உள்ளது. இந்த பதவிக்கு பாஜகவினரை நியமிக்க கவர்னர் கிரண்பேடி முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக இதுகுறித்து வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, 3 பேரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

இந்த நிலையில் சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகிய 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் வந்துள்ளது.

ஆளும் கட்சி சிபாரிசு இல்லாமல் 3 பேர் நியமிக்கப்பட்டிருப்பது புதுவை வரலாற்றில் இதுதான் முதல் முறை என்றும், இது மரபை மீறிய செயல் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கண்டிப்புக்கு பேர் போன ஐபிஎஸ் ஆபீசரான  கவர்னர் கிரண்பேடி, தானும் ஒரு அரசியல்வாதியே என்பதை இதன்மூலம் நிரூபித்து உள்ளதாக அரசியல் கட்சியினர் கூறி உள்ளனர்.