பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: புதுச்சேரி சட்டமன்றத்தில் அமளி!

புதுச்சேரி:

புதுச்சேரியில்  பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக அமளியில் ஈடு பட்டு வருகின்றனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் புதுச்சேரி  சட்டசபை கூட்டம் தொடங்கியது.அதைத்தொடர்ந்து மாநில முதல்வர் நாராயணசாமி 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

புதுவை சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர்

அப்போது, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள்  அமளியில் ஈடுபட்டுள்ளனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் கூச்சலிட்டு வருகின்றனர்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் அமளிகளுக்கு இடையே முதல்வர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

புதுச்சேரியில் 2018-19ம் ஆண்டுக்கான  வரைவு பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து, நாராயணசாமி தலைமை யிலான  காங்கிரஸ் மாநில அரசு, ஆளுநர் கிரண் பேடி தலைமையிலான மாநில திட்டக்குழு கூடி, ரூ. 7,530 கோடி-க்கு மதிப்பீடு தயாரித்தது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், கடந்த மாதம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 2ந்தேதி) புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட் கூட்டர் தொடர் தொடங்கும் என்றும் சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்திருந்த நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Puducherry budget: Opposition parties threat in assembly, பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: புதுச்சேரி சட்டமன்றத்தில் அமளி!
-=-