புதுச்சேரியில் பஸ் கட்டணம் குறைப்பு

புதுச்சேரி:

புதுச்சேரியில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் பின்னர் சிறிதளவு குறைக்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது.

5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை&புதுச்சேரி இ.சி.ஆரில் ரூ. 145ல் இருந்து ரூ. 140 ஆகவும், பை-பாஸ் சாலையில் ரூ. 135ல் இருந்து ரூ. 130 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.