புதுச்சேரி : அரசு பஸ்மீது கல்வீச்சு – டயர் எரிப்பு – அரசு பஸ்கள் நிறுத்தம்!

புதுச்சேரி:

தமிழகம், பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றுவரும் முழு அடைப்பில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பத்தில் புதுச்சேரி-கடலூர் சாலையில் டயர்களை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீயை அணைக்க முயன்ற காவலர் அய்யனார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

1typre

பாண்டிச்சேரியில் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அலறிஅடித்து ஓடினர். இதன காரணமாக  பாண்டிச்சேரி அரசு பேருந்துகள் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் ஓடவில்லை.

 

 காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து அரசியல் கட்சியனரும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் ஆங்காங்கே  ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.