புதுச்சேரி: புதுச்சேரி ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரி அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி ஊரடங்கு அமுலில் இருக்கும். இம்மாத இறுதிக்குள் 6000 பேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ துறை அதிகாரிகள் அரசுக்கு  அறிவுறுத்தியுள்ளனர். மத்திய அரசு விதிமுறைகள் வரும் வரை புதுச்சேரியில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். புதுச்சேரி, காரைக்கால் வர ஆகஸ்ட் 31 ம் தேதி வரை இ பாஸ் அவசியம் தேவை. புதுச்சேரியில் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு கிடையாது என்று கூறினார்.