எஸ்.பி.பி குணமடைய புதுவை முதல்வர் பிரார்த்தனை..

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவர் விரைந்து குணம் அடைய புதுச்சேரி முதல்வர் என். நாராயணசாமி வாழ்த்து கூறி உள்ளார். அவர் கூறியாதாவவது: பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோ னா தொற்றால் பாதிக்கப் பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனை யில் சிகிக்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி உலகம் முழுவதும் பிரார்த்திக்கும் லட்சோப லட்ச ரசிகர்களில் ஒரு ரசிகனாக இணைந்து நீங்கள் விரைந்து குணம் அடைந்து திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
ரஜினி, கமல், சிவகுமார், பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, ஏ ஆர் ரஹ்மான், அனிருத், குஷ்பூ போன்ற பல நட்சத்திரங்கள் எஸ் பி பி குணம் அடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.