பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகருக்கு நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி:

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகருக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், பாஜக தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.வி.சேகர் வீடு முன்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கு பாஜக தலைவர் தமிழிசையும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “தரம்தாழ்ந்த அரசியலை பாஜக செய்து வருவதால்தான் பத்திரிகையாளர்கள் பாஜகவை விமர்சிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.