புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு : ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் முதல்வர்
புதுச்சேரி
புதுவையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு அளிக்க தீர்மானித்துள்ள முதல்வர் அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறார்.
தமிழகத்தில் ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்குப் பொங்கல் பரிசாக ரூ.2500 அளிக்க்ச் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பரிசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாரம் அந்த தொகை மக்கலுக்கு வழங்கப்படுகிறது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “தமிழக அரசு ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்கு தலா ரூ.2500 பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்டுக்ள்ளது. ஆனால் பாண்டிச்சேரி மாநிலத்துக்கு அவ்வளவு வருவாய் இல்லை. ஆகவே இங்கு நிதி நெருக்கடி உள்ளது. எனவே புதுவை அரசு மக்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தேசித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் ஒப்புதலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஏற்கனவே அரசு கடந்த 5 மாதங்களாக இலவச அரிசி வழங்க இருந்தது. ஆனால் ஆளுநர் அதை மூன்று மாதங்களாக குறைத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.