கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை…

புதுச்சேரி:

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில், மாநிலத்தில் மார்ச் 31ந்தேதி வரை பள்ளிக் கல்லூரிகள், மால்கள்,சினிமா தியேட்டர்களை மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில்  அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில், பள்ளிக்கல்விக் கூடங்கள், பல்கலைக்காகங்கள், மால்கள், சுற்றுலா ஸ்தலங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதித்துள்ளது. மத்தியஅரசும், நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரிகளை மூட அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமயிலான மாநில அரசு, புதுச்சேரியில் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதா அறிவித்து உள்ளது.