புதுச்சேரி,

புறவாசல் வழியாக 3 பாரதிய ஜனதா கட்சியினரை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 2வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு, நியமன எம்எல்ஏக்கள் பதவி வழங்கி, அவர்களுக்கு ரகசியமாக ஆளுநர் பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

இது நாடு முழுவதும் அரசியல் கட்சியினரிடையே அதிர்வலைகள ஏற்படுத்தி உள்ளது. கவர்னர் கிரண்பேடியின் வரம்புமீறிய செயலை கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரியை விட்டு  வெளியேற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் 2-வது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதேசி மில் அருகே காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் இன்று 2 வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.