ந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக ‘காம்ரேட்’கள் தங்கள் தளங்களை  இழந்து வந்தாலும் –புதுச்சேரியில் கொஞ்சம் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளனர்.உபயம்:மறைந்த தலைவர்  சுப்பையா.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்- சில சிறு கட்சிகள் துணையோடு தேர்தலை எதிர்கொண்டார்கள்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சேது செல்வம் 2 ஆம் இடம் பெற்றார். தி.மு.க.வேட்பாளர் கலியபெருமாள் 4 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டதோடு ;டெபாசிட்’ தொகையையும் பறி கொடுத்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் அசோக் ஆனந்த் பதவி இழந்ததால்-  மக்களவை தேர்தலோடு –தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அடுத்த மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

கூட்டணி தர்மப்படி தி.மு.க.கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி இருக்க வேண்டும்.ஆனால் புதுச்சேரியில் கூட்டணியின் பெரிய அண்ணனான காங்கிரஸ் கட்சி- அந்த தொகுதியை தி.மு.க.வுக்கு தாரை வார்த்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புதுச்சேரி ‘காம்ரேட்’கள் அவசர அவசரமாக சென்னைக்கு வண்டி பிடித்து நேற்று அறிவாலயம் வந்து தி.மு.க.தலைவர் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

‘டெபாசிட்’ இழந்த உங்கள் கட்சிக்கு தொகுதியை ஒதுக்குவது எந்த ஊர் நியாயம் என்பது அவர்கள் கேள்வி/

புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வெற்றிக்கான யுக்தியை கையாள காங்கிரஸ் நேற்று நடத்திய கூட்டத்தையும் கம்யூனிஸ்ட்கள் புறக்கணித்தனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க.-பா.ம.க-பா.ஜ.க.கூட்டணி வலிமையாக உள்ளது.

பல பாக்கெட்டுகளில் ஓட்டுகளை வைத்துள்ள கம்யூனிஸ்ட் களை முறைத்து கொண்டால்-அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி கேள்வி குறிதான்.

அங்கு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வாய்ப்பு இப்போது ஸ்டாலின் கையில் உள்ளது.

–பாப்பாங்குளம் பாரதி