காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி உண்ணாவிரதம்

 காரைக்கால்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, என்.ஆர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் இன்று உண்ணாவிரத போராாட்டம் நடைபெறுகிறது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் உத்தரவிட்டு காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி யும், காரைக்காலுக்கான 7 டி.எம்.சி. தண்ணீரை உறுதி செய்ய வலியுறுத்தியும், காரைக்காலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் இன்று   காரைக்கால் பஸ்நிலையம் அருகே உள்ள பழைய ரெயில்வே நிலையம் அருகே  முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கட்சி தொண்டர்கள்,  பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.