புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, சனி ஞாயிறு விடுமுறை! நாராயணசாமி

புதுச்சேரி,

ரசு சம்பந்தமாக தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ள தாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு அதிகாரிகள், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அரசு தொடர்பான தகவல்களை பரிமாறக் கூடாது. மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி எச்சரித்தார்.

நேற்று புதுச்சேரி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  கூட்டம் முடிந்ததும் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது,

 

 

அரசு ஊழியர்கள் வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அரசு உத்தரவுகளை வெளியிடக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவு  புதுச்சேரியில் இதுவரையில் பின்பற்றபடவில்லை.  அரசு சம்பந்தமான உத்தரவு கள், பணி இடமாற்ற உத்தரவுகளை, சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பக் கூடாது என தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

அதனடிப்படையில், அரசு ரகசியத்தை பாதுகாக்கும் சட்டத்தின்படி, தலைமைச் செயலர், அனைத்து அரசு அதிகாரிகளும் அரசு சம்பந்தமான உத்தரவுகளை, சமூக வலைதளங்கள் மூலம் பரிமாற கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து ஊழியர்களும் இதை பின்பற்ற வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. விடுமுறையை எடுத்துக் கொள்வது குறித்து, அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.

ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், தொழில் துறைக்கு நிலம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டதாகவும் கூறினார்.

வரும் 10ம் தேதி, மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடக்கும் அப்போது சட்டசபை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்னர், புதுச்சேரி மாநில அரசு அதிகாரி ஒருவர் புதுச்சேரி கவர்னர் இடம்பெற்று இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச செய்தியை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப கூடாது என தலைமை செயலர் மனோஜ் பரீதா  உத்தரவிட்டுள்ளார்.