புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு: பாஜ நியமன எம்எல்ஏக்களை பேரவைக்கு செல்ல கிரண்பேடி வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியால் நியமனம் செய்யப்பட்ட பாஜ நியமன எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்லுங்கள் என்று கிரண்பேடி கூறி உள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜ.வை சேர்ந்த 3 பேரை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினார். ஆனால், அவர்களை சட்டமன்றத்திற் குள் விட சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.
இதுதொடர்பான சென்னை உயர்நீதி மன்ற வழக்கில், பாஜ உறுப்பினர் நியமனம் செல்லும் என்று கூறியது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும்படி, நியமன எம்எல்ஏக்களுக்கு கிரண்பேடி உத்தரவிட்டு உள்ளர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காததால் பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் பேரவை செல்லலாம் என்றும், பேரவையில் அனுமதிக்கவில்லை என்றால் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் கிரண்பேடி கூறி உள்ளார்.
இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.