புதுச்சேரி:  புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே ன மோதல் போக்கு நிலவியது. இந் நிலையில், கிரண்பேடி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இந் நிலையில் புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பணியாற்றிய அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அவரது பதவிக்காலத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி, மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த பொறுப்புகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை நிலை ஆளுநரின் அலுவலக சிறப்பு அதிகாரியாக பதவி நீட்டிப்பில் இருந்த தேவநிதி தாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, அப்பொறுப்புக்கு மலர்வண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.