புதுச்சேரியில் பயங்கரம்: குண்டு தயாரித்தபோது ரவுடியின் கை துண்டானது

புதுச்சேரி,

புதுச்சேரி அருகே வீட்டிற்குள் வைத்து குண்டு தயாரித்த போது அது வெடித்து சிதறியது. இதில் குண்டு தயாரித்த வரின் கை துண்டானது.

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் பொம்மை யார்பாளைம் சுனாமி குடியிருப்பில் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள்  ரவுடிகள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் அவர்கள்  வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தனர். அபபோது எதிர்பாராதவிதமாக ஒரு  குண்டு வெடித்தது. இதில், குண்டு தயாரித்து கொண்டிருந்த  ரவுடி ஒருவரின் கை துண்டானது.

குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆரோவில் போலீசார், குண்டு காயத்துடன் கிடந்த ரவுடியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.