புதுச்சேரியில் ஜான்குமார் வெற்றி; காங்கிரஸ் மீதான மக்கள் நம்பிக்கை! முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளது  காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுவை காமராஜர்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமாரும், அவரை எதிர்த்து, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புவனா என்ற புவனேஸ்வரனும்,  முன்னாள் அமைச்சர் கண்ணனின் கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீணா உள்பட 9 பேர் களமிறங்கினர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுகவு ஆதரவு அளித்தது. கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் 11 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் உள்ள 6 ஆயிரத்து 655 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 4 ஆயிரத்து 29 வாக்குகளும், புவனேஸ்வரன் 2 ஆயிரத்து 92 வாக்குகளும் பெற்றிருந்தனர். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 1937 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார்.

2-வது சுற்றில் 22 வாக்குச்சாவடிகளில் பதிவான 15 ஆயிரத்து 134 வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 8 ஆயிரத்து 866 வாக்குகளும், புவனேஸ்வரன் 5 ஆயிரத்து 84 வாக்குகளும் பெற்றிருந்தனர். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 3 ஆயிரத்து 782 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார்.

3-வது சுற்றில் 10 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. 3 சுற்று வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14 ஆயிரத்து 782 வாக்குகளை பெற்றிருந்தார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 7 ஆயிரத்து 612 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் 7 ஆயிரத்து 171 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில்  7 பேர்

வாக்குகள் விவரம்:

மொத்த வாக்காளர்கள் – 35,009
பதிவானவை – 24,310
ஜான்குமார் (காங்.) வெற்றி – 14,782
புவனேஸ்வரன் (என்.ஆர்.காங்.) – 7,612
பிரவீணா (நாம் தமிழர் கட்சி)   - 620
வெற்றிச்செல்வன் (ம.மு.கா.) – 343
லெனின் துரை (சோசலிஸ்டு கம்யூ.) – 294
கோவிந்தராஜ் (அகில இந்திய மக்கள் கழகம்) – 121
பார்த்தசாரதி (மக்கள் விடுதலை கட்சி) – 61
சகாயராஜ் (சுயே) – 37
சுகுமாறன் (சுயே) – 14
நோட்டா – 426

ஜான்குமார் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி,  இந்த வெற்றி, புதுவை காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை காட்டுகிறது என்றும், புதுச்சேரி மக்கள் என்றும் மதசார்பற்ற கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள்  என்பது ஏற்கனவே நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உறுதியானது, தற்போது அது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிவர்,  புதுவை அரசுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியவர், அவரால் இந்த மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றவர்,  இந்த வெற்றிக்கு கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடும் முக்கிய காரணமாகும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chief Minister Narayanasamy, Congress rule, Johnkumar, kamarajan nagar by-election, Narayanasamy, People's confidence, Puducherry
-=-