புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி: ஜான் குமார் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்

புதுச்சேரி:

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர், இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காமராஜ்நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். இதையடுத்து   காலியாக இருந்த காமராஜ்நகர் தொகுதிக்கு கடந்த மாதம் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.  சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்,   புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜான்குமார் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவரக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Puducherry Kamaraj Nagar constituency: John Kumar sworn in as MLA