புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னை:

ம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையின்  பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானதால்,  முதல்வர், சபாநாயகர் உள்பட  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உழியர்கள், அதிகாரிகள் என  126 பேருக்கு  நேற்று  சட்டமன்ற கமிட்டி அறையில்  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சோதனை முடிவு வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் நாராயணசாமி உள்பட அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு தொற்று இல்லை என்று முடிவு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சட்டமன்ற ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.