புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் டிடிவி.க்கு ஆதரவு

புதுச்சேரி:

புதுச்சேரி அதிமுக ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து அதிமுக எம்.பி., எம்எல்ஏ.க்கள் சிலர் தினகரனை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் இன்று புதுச்சேரி அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுலகிருஷ்ணன் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.