புதுச்சேரி:

ன்று பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த நாளான இன்றைய தினம், முருக பெருமான் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோவிலில், முருக பெருமான் புல்லட் வாகனத்தில், ஹெல் மெட் அணிந்து பாதுகாப்புடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இது பார்ப்போரிடைய பக்தி பரவசத்தை மட்டுமல்லாது, ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

புல்லட் வாகனத்தில் உலா வந்த முருகன்

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினம் பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம்  அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். . இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு,  புதுச்சேரி பாகூர் கொம்யூன் கிருமாம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம்  இன்று கோலாகலமாக  நடை பெற்றது. அதைத்தொடர்ந்து, உற்சவர் முருகன்  புல்லட் வாகனத்தில் தலைக்கவசத்துடன் அமர வைக்கப்பட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புல்லட் வாகனத்தில் வந்த ஸ்ரீ முருகப்பெருமான் கம்பீரமாக வலம் வந்தார்.  இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.