புதுச்சேரியில் சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா: ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து தமது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்திர ராஜனுக்கு அனுப்பி உள்ளார். சிவக்கொழுந்தின் சகோதரர் ராமலிங்கம் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.