புதுச்சேரியில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி

புதுச்சேரி

ட்டப்படிப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் புத்தங்களைப் பார்த்து விடையளிக்கப் புதுச்சேரி  பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பட்டப்படிப்பு இறுதி தேர்வு தவிர மற்ற மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பட்டப்படிப்புக்கான இறுதி தேர்வு நடைபெற உள்ளது.

இது குறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் 5 தேர்வு எழுதினால் சிலவற்றை ஆன்லைனிலும் சிலவற்றை ஆப்லைனிலும் எழுதலாம் என அறிவிக்கப்ட்டுளது.

அத்துடன் இறுதி ஆண்டு தேர்வில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் புத்தகங்களைப் பார்த்து விடையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு அறைக்குள் புத்தகங்கள்,குறிப்புக்கள், பிற ஆய்வுப் பொருட்களை எடுத்து வரத் தேர்வு கட்டுப்பாளர் அனுமதி அளித்துள்ளார்.

You may have missed