புது கார் வாங்கிய நடிகர் புகழ் !

எதார்த்தமான நகைச்சுவை உணர்வால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தொலைக்காட்சி பிரபலம் புகழ்.

சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த புகழ் தனது திறமையாலும், தன்னம்பிக்கையாலும் இன்று தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் புகழ், அந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘கார் கிளீனர் டூ கார் ஓனர்’ இதல்லவா வளர்ச்சி என புகழை பாராட்டி வருகின்றனர்.