டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் – புதிய மைல்கல்லை எட்டிய புஜாரா!

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சத்தீஷ்வர் புஜாரா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸின் மிக முக்கியமான நேரத்தில், மிகப் பொறுமையாக ஆடி 77 ரன்களை சேர்த்து அணியைத் தோல்வியிலிருந்து காப்பதில், மிக முக்கியப் பங்காற்றினார் புஜாரா.

இந்தப் போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர்(15,921), ராகுல் திராவிட்(13,265), சுனில் கவாஸ்கர்(10,122), விவிஎஸ் லக்ஷ்மண்(8,781), சேவாக்(8,503), விராட் கோலி(7,318), சவுரவ் கங்குலி(7,212), திலிப் வெங்சர்கர்(6,868), முகமது அசாருதீன்(6,215) குண்டப்பா விஸ்வநாத்(6,080) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.