பாக்சிங் டே டெஸ்ட்: சதம் அடித்து கங்குலியின் சாதனையை முறியடித்த புஜாரா!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் புஜாரா சதம் அடித்து முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

pujara

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வெல்லாத இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்று அசத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. பாக்சிங் டே என்றழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதல் நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 2விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்தது. இதில் கோலி 47 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் தனது ஆட்டத்தை தொடங்கிய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலியின் சாதனையை புராஜா முறியடித்துளார். சங்குலில் டெஸ்ட் அரங்கில் 16 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி லட்சுமண் (17சதம்) சாதனையையும் புஜாரா சமன் செய்துள்ளார்.

மேலும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் சதம் அடித்த 5வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், சேவாக், விராட் கோலி, ரஹானே உள்ளிட்டோர் சதம் அடித்துள்ளனர்.