புலமைப்பித்தன் பேரன் திலீபன் சினிமா இயக்குநர் ஆகிறார்…
எம்.ஜி.ஆருக்கு, காலத்தால் அழிக்க முடியாத சினிமா பாடல்களை கொடுத்தவர், புலமைப்பித்தன்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருக்கும் பாடல் எழுதியுள்ளார்.
இவரது பேரன் திலீபன் புகழேந்தி, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த, ‘பள்ளிக்கூடம் போகலாமா?’ என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார்.
மேலும் சில படங்களிலும் நடித்துள்ள திலீபன், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
திரில்லர் கதையை அவர் தேர்வு செய்துள்ளார்.
உயிருக்கு உயிராக ஒரு பெண்ணை காதலிக்கிறான், ஒரு இளைஞன். ஆனால் அந்த பெண், வேறு நபரை கல்யாணம் செய்து கொள்கிறாள். இதனால் ‘சைகோ’ வாகும் இளைஞன், அவளை பழி வாங்க முயல்வது தான், கதையின் கரு.
இந்த படத்தில் திலீபனே நாயகனாக நடிக்கிறார்.
சில இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள பிராஷி சின்ஹா, கதாநாயகியாக நடிக்கிறார்.
– பா. பாரதி