‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் சொல்லமத்தான் பாடல் வெளியீடு !

தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களை அதிரடியான கதை களத்துடன் கூறுவதில் வல்லவர் முத்தையா. முத்தைய்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ‘புலிக்குத்தி பாண்டியன்’.

முத்தையா படங்களின் தலைப்பு எப்போதுமே முரட்டுத்தனமாக இருக்கும் பட்சத்தில் இத்திரைப்படத்திற்கு பேச்சி என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது படத்தின் டைட்டிலை ‘புலிக்குத்தி பாண்டியன்’ என மாற்றியுள்ளது படக்குழு.

லக்‌ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நேரடியாக பொங்கலுக்கு (ஜனவரி 14) சன் டிவியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி 6.30 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சொல்லாமத்தான் என்று தொடங்கும் இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது .