தேடப்பட்டு வந்த பிரதமர் மோடியின் போலி ‘ஆன்மீக குரு’ கைது

--

டில்லி

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குரு என்று கூறிக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் விஐபி அந்தஸ்து பாதுகாப்புடன் வலம் வந்த புல்கிட் மகராஜ்  கைது செய்யப்பட்டார்.

புல்கிட்மகரா4 குறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் பிரதமர் அலுவல கத்தில் இருந்தும் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில்  வழக்கு பதிவு செய்த டில்லி போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

கதக் நடன கலைஞரான புல்கிட், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து கொண்டு மோடியின் குரு என்று கூறி  வெளிநாடுகளில் தனது கலை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.  பிரதமரின் பெயரைச் சொல்லி வேறு மோசடிகள் எதுவும் செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட பல முக்கிய பா.ஜ.பிரமுகர்களுடன் போட்டோ எடுத்து வீடு முழுவதும் காட்சிக்கு வைத்துள்ளார்.

சிதாபூர் மாவட்ட ஆட்சியரிடம் டில்லியில் அமைச்சக அதிகாரி என கூறி சலுகைகள் கோரியதாக ஏற்கனவே அவர் மீது புகார் எழுந்துள்ளது.

டில்லி அசோகா சாலையில் நடைபெற்ற புல்கிட் மிஸ்ரா திருமணத்தில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்துகொண்டார். புல்கிட் மகராஜுக்கு பல பெரும் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த உயர் அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.