Random image

உத்தரபிரதேசத்தில் நாள்பட்ட நுரையீரல் நோய் பாதிப்பு 46 சதவீதம் அதிகரிப்பு

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் நாள்பட்ட நுரையீரல் நோய் பாதிப்பு கடந்த 1990ம் ஆண்டு முதல் 46 சதவீதம் வரை அதிகரித்திருப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நாள்பட்ட சுவாச நோய்கள் குறித்த ஆய்வு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. இதில் 1990ம் ஆண்டுகளில் 52 லட்சம் பேர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று இந்த எண்ணிக்கை 98.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானுக்க அடுத்தபடியாக உத்தரபிரதேசம் அதிக சுவாச கோளாறு நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆஸ்துமா போன்ற நோய் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் அதிகளவில் உள்ளது.

2017ம் ஆண்டில் மக்கள் தொகை அறக்கட்டளை அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவாச கோளாறால் உத்தரபிரதேசத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையும், இயலாமையுடன் வாழ்நாளை கழிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் ஏற்பட்ட அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டது. இதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இயலாமையுடன் வாழ்நாளை கழிப்பிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதில் 25 சதவீதம் புகைப்பிடித்தலால் ஏற்படுகிறது என்பது 2016ம் ஆண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து நுரையீரல் வல்லுனர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ‘‘காற்றில் பரவும் நுண் துகள்களால் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 கிலோ உணவும், 3 லிட்டர் தண்ணீரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் 8 லிட்டர் காற்றை உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும். இதில் 20 சதவீத ஆக்சிஜன் மாசு அடைந்துள்ளது. இது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதித்துவிடுகிறது. இதனால் தான் நுரையீரல் தொடர்பாக நோய்கள் அதிகரிக்கிகறது’’ என்றார்.

இந்தியா போன்ற சுகாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட சுவாச நோய் பாதிப்பை கண்டறிய தாமதம் ஏற்படுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. நுரையீரல் நோயை இந்தியாவில் கண்டறிந்து விடக் கூடிய ஒரு விஷயம் தான்.

ஆனால் இவை உடலில் ஏற்படும் அறிகுறையை தொடர்ந்தே அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இத்தகைய அறிகுறி உள்ளவர்கள் தாமதமாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.