நாக்பூர்:

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்திய அணியினர் கையில்  கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடினர்.

இந்த வருடத்திற்கான இரானி கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. 4வது நாள் போட்டியின இன்றைய போட்டி நாக்பூரில் உள்ள விதர்பாக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முன்னதாக இந்திய வீரர்கள், நேற்று நடைபெற்ற காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.

ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  முதலில் விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. தொடக்க பேட்ஸ்மேன் மயாங்க் அகர்வால் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

3-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் (114) விளாசினார். பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதர்பா கார்னிவர் சதத்தால் (102) 425 ரன்கள் குவித்தது. பின்னர் ரெஸ்ட் ஆப் இந்தியா 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடியது.

மயாங்க் அகர்வால் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி – ரகானே அசத்தாலா ஆடி ரன்களை குவித்தார். ரகானே 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில்,  ஹனுமா விஹாரி 180 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 52 பந்தில் 61 ரன்கள் அடிக்க ரெஸ்ட் ஆப் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. அதையடுத்து, 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்யப்பட்டதுரு.  இதனால் விதர்பா அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ரெஸ்ட் ஆப் இந்தியா.

கடந்த வருடம் சதம் விளாசியிருந்த ஹனுமா விஹாரி, இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதி களின் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 44 பேர் உடல் சிதறி உயிரிழந்து விவகாரம் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விளையாட்டு வீரர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த கொடுமையான தாக்குதல் குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியமான  பிசிசிஐ கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தலைவரான விராட்டி கோலி, இந்த தாக்குல் குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறி உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான  வீரேந்திர சேவ், ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் ஹர்பஜன் சிங் உள்பட டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா மற்றும் ஆகாஷ் சோப்ரா,  ஹரேந்தர் சிங், பஜ்ரங் புனியா உள்பட ஏராளமானோர் தங்களது கண்டனங்களையும், இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.