பாகிஸ்தானிற்கு மரணஅடி கொடுத்த அமெரிக்கா – ரூ.7,100 கோடி நிதி உதவி நிறுத்தம்!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதி உதவியை அமெரிக்கா திடீரென நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு இது மிகப்பெரிய பேரிடியாக பார்க்கப்படுகிறது.

trump

கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்தியர்களிடையே கொந்தளிப்பு உருவானது.

வீரர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம்சாட்டிய இந்தியா அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு எதிராக அனைத்து நாடுகளை ஒன்றிணைக்க இந்தியா முயன்று வருகிறது.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், “ புல்வாமா தாக்குதலினால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான போர் மூழும் சூழல் நிலவுகிறது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான நிலையை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தாக்குதலில் இந்தியா கிட்டத்தட்ட 50 வீரர்களை இழந்துள்ளது. இனிமேலும் இது தொடர அனுமதிக்க முடியாது. இந்தியா தன்னை காத்துக் கொள்ள உரிமை உள்ளது.

புல்வாமா தாக்குதலால் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த 1.3பில்லியன் டாலர்( இந்திய ரூபாய் மதிப்பில் 7,100 கோடி) நிதி உதவியை நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது “ என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பொருதாளார பிரச்சனையை சந்தித்து வரும் பாகிஸ்தானிற்கு அமெரிக்காவின் இந்த முடிவு மரண அடியாக பார்க்கப்படுகிறது.