புனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு

புனே: நவம்பர் 1ம் தேதி முதல் புனேயில் பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக  மார்ச் முதல் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பின்னர் மாநிலங்களில் தொற்று பாதிப்பு நிலைமைகளுக்கேற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு  வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் நவம்பர் 1ம் தேதி முதல் பூங்காக்கள் திறக்கப்படும் என புனே மாநகர மேயர் முரளிதர் மோகல் அறிவித்தார். நகர நிலைமையை மத்திய அரசின் குழு ஆய்வு செய்துள்ளதாக கூறினார்.

உள்ளூர்வாசிகள் பூங்காக்களை பார்வையிடும்போது தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிகை நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.