மகாராஷ்டிரா: ரூ.3 கோடி மதிப்பு பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்…5 பேர் கைது

மும்பை:

பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவிற்கு பின்னர் இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனோ போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்குள்ள ஒரு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3 கோடி ரூபாயாகும்.