Random image

மாணவிகளின் உள்ளாடை நிறம் குறித்த விதி : பெற்றோர் போராட்டம்

புனே

புனே நகரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் உள்ளாடை நிறம் குறித்த விதிகளை எதிர்த்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பள்ளிகலில் மேயிர்ஸ் எம் ஐ டி பல்ளியும் ஒன்றாகும்.    இந்த பள்ளியில் மாணவிகளுக்கு புதிய விதிமுறைகளை நிர்வாகம் அறிவித்துள்ளது.   அந்த விதிமுறைகளை பள்ளி டைரியில் எழுதி பெற்றோர்களுக்கு நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த விதிமுறைகளின் படி, “மாணவிகள் வெள்ளை மற்றும் தோல் நிற உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும்.   மாணவிகளின் ஸ்கர்டின் நீளம் அவர்களின் உயரத்தைப் பொறுத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   அதற்கு குறைவாக மாணவிகள் ஸ்கர்ட் அணியக்கூடாது.   குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவர்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.

இதர்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ள்னர்.   பெற்றோர்களில் ஒருவர், “மாணவிகளின் உள்ளாடைகளுக்கும் உடைகளுக்கும் கட்டுப்பாடு விதிப்பது தவறானது.   மேலும் இவ்வாறு நடக்கத் தவறினால் மாணவிகள் மீது மட்டுமின்ற் பெற்றோர்கள் மீதும் நடவடிக்க எடுக்கப்படும் என நிர்வாகம் கூறி உள்ளது.” என தெரிவித்தார்.

இது குறித்து அந்தப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுசித்ரா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். “நாங்கள் அமைத்துள்ள விதிமுறைகள் தவறானவைகள் அல்ல.   மாறாக அவ்விதிகள் தூய்மையின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ளது.   ஏற்கனவே கடந்த காலங்களில் எங்களுக்கு சில அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன.  அதன் அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளர்.