டில்லி

ந்திய ரெயில்களில் புனேயில் இருந்து செகந்திராபாத் செல்லும் சதாப்தி ரெயில் மிகவும் சுத்தமனது என ரெயில் பயணிகள் தேர்வு செய்துள்ளனர்.

Exif_JPEG_420

இந்திய ரெயில்களில் சுத்தம் சரியாக இல்லை எனவும் சுகாதாரம் பேணப்படுவது இல்லை எனவும் புகார்கள் எழுகின்றன. ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்திகரிப்பு நடந்து வருகிறது. இதை ஒட்டி ஐஆர்சிடிசி ரெயில்வே பயணிகளிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த கணக்கெடுப்பு முடிவில் காணபடுவதாவது :

ஐஆர்சிடிசி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எத்தனை ரெயில்கள் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் விருப்பமாக உள்ளன என கணக்கெடுப்பு நிகழ்த்தியது. இந்த கணக்கெடுப்பு 209 ரெயில்களில் நடைபெற்றது. இந்திய ரெயில்வேயில் 16 பிரிவுகளில் 15360 பயணிகளிடம் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இந்த கணக்கெடுப்பு கழிவறைகள், பெட்டிகளில் சுத்தம், மற்றும் சுத்தமான போர்வைகள் ஆகிய இனங்களின் அடிப்படையில் நடந்தது.

இதில் தென்னக ரெயில்வேக்கு ரெயில் நிலைய சுத்தத்தில் முதல் இடம் கிடைத்துள்ளது. தென்னக ரெயில்வேக்கு 736 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த வரிசையில் கிழக்கு மத்திய ரெயில்வே கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு 572 புள்ளிகள் கிடைத்துளன. ரெயில்கள் வரிசையில் ராஜதானி, சதாப்தி, டொரண்டோ ஆகிய ரெயில்கள் பிரிமியம் வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளன.

பிரிமியம் ரெயில்கள் வரிசையில் ராஜதானி ரெயில்களுக்கு அதிகபட்சமாக 787 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றில் மும்பை ராஜதானிக்கு 878 புள்ளிகள் கிடைத்துள்ளன. சதாப்தி ரெயில்களில் புனே – செகந்திராபாத் ரெயிலுக்கு 916 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த ரெயில் சதாப்தி வரிசையில் மட்டுமின்றி ஒட்டு மொத்த ரெயில்களிலும் அதிக புளிகள் பெற்றுள்ளது.